திண்டிவனம் மூங்கிலம்மன் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4152 days ago
திண்டிவனம்: திண்டிவனம் கிராமதேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கிற மூங்கிலம்மனுக்கு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்ய õண உற்சவம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 12ம் தேதி இரவு கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செல்லப்பா குருக்கள் வைபவத்தை நடத்தினார். நேற்று இரவு திருத்தேர் வீதியுலா நடந்தது. இன்று காலை திருத்தேர் வீதியுலாவும், 64 சந்தி எல்லைக்கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பூஜைகளை பூசாரிகள் பழனி, ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.