உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாளையம் கோவிலில் தர்மர் பட்டாபிஷேக விழா!

கீழப்பாளையம் கோவிலில் தர்மர் பட்டாபிஷேக விழா!

உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேக விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த  கீழப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீதிரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி காலை கம்பம் ஏறுதலும்,  மதியம் அரவான் கடபலி கொடுத்தலும், தொடர்ந்து நம்பி குளக்கரையில் இருந்து அக்னி கரகம் வீதியுலா மற்றும் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து  18ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று பகல் 12:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஒன்றிய  கவுன்சிலர் முன்னிராஜ்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !