உய்ய வந்தாள் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :3828 days ago
பரமக்குடி : எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் கோயிலில் 22 ம் ஆண்டு பூச்சொரிதல், அக்னிசட்டி மற்றும் பால் குடவிழா, ஏப்., 3 ல் காப்புக்கட்டுடன் துவங்கியது.தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏப்., 17 ல் பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூச்சொரிதல் விழாவும் நடந்தது. மறுநாள் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் செய்தனர். ஏப்., 19 ல் கருப்பண்ணசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.