உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா!

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை பெருவிழா இன்று சாகை வார்த்தலுடன் துவங்குகிறது. நாளை பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 5ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பூஜாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மே, 6ம் தேதி காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் அணியும் தாலிகளை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு கிணற்றில் குளித்து ஊருக்கு திரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !