உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி சித்திரை விழா நாளை தொடக்கம்

வீரபாண்டி சித்திரை விழா நாளை தொடக்கம்

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா நாளை கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. அக்னி சட்டி தவிர குறிப்பாக அங்கபிரதட்சணம் செய்வது உட்பட அனைத்து நேர்த்திக் கடன்களையும் மே 5 க்கு முன்னதாக முடித்து விட வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக இன்று முக்கொம்பு என்ற கம்பம் கொண்டு வருதலுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. முல்லை பெரியாற்றில் முக்கொம்பு இன்று ஊறவைக்கப்படும். நாளை (ஏப்., 22) கம்பம் நடுதலுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கோயில் உரிமைதாரர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் தண்ணீர் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபடுவர். அதன் பின் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வழிபாட்டினை தொடங்குவர். மே 12 ல் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மே 19 ஊர் பொங்களுடன் விழா நிறைவடையும். மே 12 முதல் அக்னிசட்டி எடுக்கலாம். மற்ற நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் நாளை முதல் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கலாம். குறிப்பாக அங்கபிரதட்சணம் செய்பவர்கள் மே 5 க்கு முன்னரே தங்களது நேர்த்திக் கடனை முடித்து விட வேண்டும், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !