ஈசன், இலிங்கமாக இருந்து அருள் புரிதல்
ADDED :3929 days ago
வாணாசு ரன்பூசை செய்திடும்இ லிங்கத்தெண்
மாகோடி சதம ளவிலை
மன்னும்ஒன் பதுகோடி ஆலயங் கண்டனன்
மருவுதென் இலங்கை வேந்தன்
கோணாமல் ஒருவளவன் நித்தம்ப்ர திட்டைபுரி
கோயில்கோ டிக்க திகமாம்
குவலயந் தன்னில்அடி யர்க்கருள் புரிந்துநீ
கோயில்கொண் டனைய னந்தம்
தூணானை கட்டுதறி மாக்குடைந் திடுகுழவி
தூயநெற் கொளும ரக்கால்
தொகுநெல் லுலக்கைமுத லானவடி வத்தடியர்
தொழுதிட இலிங்க மாகிச்
சேணாடர் தொழநின்று பேரருள் புரிந்தநின்
சீர்க்கருணை பாடல் எளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.