உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியர் கோவிலுக்கு ரூ.1.83 லட்சம் காணிக்கை!

சுப்பிரமணியர் கோவிலுக்கு ரூ.1.83 லட்சம் காணிக்கை!

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திருவிழா, தைப்பூசத்திருவிழா, மண்டல பூஜைத்திருவிழா, உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்தக்கோவில் உண்டியல் எண்ணும் பணி பத்து மாதத்திற்கு பின்னர், செயல்அலுவலர் காளியப்பன் தலைமையில் பணி நடந்தது. இதில், மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 386 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !