உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திரிதியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு!

அட்சய திரிதியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு!

ஆனைமலை : கோவை மாவட்டம் ஆனைமலையில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாத
பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அட்சய திரிதியை முன்னிட்டு விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீரங்கநாதருக்கும்
மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீதேவி பூதேவிக்கும் தங்கநிற நாணயத்தால் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு இருந்தது.

சிறப்பு அலங்காரம் : சுவாமி மகாவிஷ்ணு மனத்தில் மகாலட்சுமி இடம் பெற்றது அட்சயதிரிதியை நாளில் என்பதால், நேற்று ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில்,
காலை, 8:00 மணி முதல் ரங்கநாதப் பெருமாளுக்கும் ஸ்ரீ தேவிக்கும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அட்சய திரிதியை சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !