உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாதசுவாமி கோவில் உண்டியலில் ரூ.18.45 லட்சம்!

தேவநாதசுவாமி கோவில் உண்டியலில் ரூ.18.45 லட்சம்!

கடலூர்: திருவந்திபரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியலில் காணிக்கையாக தங்கம், வெள்ளி நீங்கலாக 18.45 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடலூர் திருவந்திபுரம் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.  விழுப்புரம் உதவி ஆணையர் பிரகாஷ், தக்கார்  ஜோதி, செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. வங்கிப் பணியாளர்கள்,  தன்னார்வ தொண்டர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 454 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி பொருட்களும், 8  வெளிநாட்டு கரன்சிகளும், 18 லட்சத்து 45 ஆயிரத்து 376 ரூபாய் ரொக்கமும் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !