தேவகோட்டை கண்டதேவி தேர் புதுப்பித்தல் பூஜை
ADDED :3854 days ago
தேவகோட்டை : தேவகோட்டை,கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ,கடந்தாண்டு திருவிழாவில் தேர் பழுதாகி உள்ளதால் பழுது நீக்கி புதுப்பித்தால் தான் ஓட்ட முடியும் என்று கூறியதால் தேரோட்டம் நடக்கவில்லை. தேரை பிரித்து புதுப்பிப்பதற்கான தேர்பூஜை சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பு செல்வராஜ், கோயில் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்தது. ஸ்தபதி சேலம் பாலசுப்பிரமணியன் தலைமையில் பணியாளர்கள் தேரை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆத்மநாதன், ஸ்தபதி கிருஷ்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.