போடியில் சித்திரை திருவிழா நிறைவு
போடி : போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. போடி பரமசிவன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தினமும் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம், திருக்கல்யாணம், இரவு கலை நிகழ்ச்சிகள், ஒயிலாட்டமும் நடந்தது. சிவன் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் முடிந்து மலைக்கோயில் சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு தக்கார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜய பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், துணைச்செயலாளர் ராஜாராம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், முத்துராஜன், விசுவநாதபாண்டியன், சந்தியாஸ் மஹால் சம்பத்சந்தியா, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், பழனிமுருகன் ஏஜென்சீஸ் ஜெயராம், கவுன்சிலர் மகேந்திரன், ராம் புரோட்டா ஸ்டால் அருணாச்சலம், சொக்கநாதர் கோயில் டிரஸ்ட் பொருளாளர் கணேசன், பாலாஜி பவன் ஹோட்டல் ஜோதிகிரி, ஆர்.ஏ. ஆயில் ஸ்டோர் ஆறுமுகம், வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.