நதிக்கரை முருகன்
ADDED :3942 days ago
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. நதிக்கரை சுப்ரமணியர் கோயில். இக்கோயிலில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக்கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடன் பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட, சர்ப்பதோஷம் நீங்குவதோடு சகல சவுபாக்கியங்களும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை!