சித்தபிரமை நிவாரண தலம்
ADDED :3937 days ago
ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகில், ஏரலில் உள்ளது சேர்மன் அருணாசலசுவாமி கோயில். அருணாசலசுவாமியை பக்தர்கள் பெருமாள். சிவன், முருகனான பாவித்து வழிபடுகிறார்கள். இக்கோயிலில் திருமண்ணும், தண்ணீரும் பிரசாதமாகத் தரப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி வழிபட்டால் விரைவில் குணமாவர் என்பது நம்பிக்கை.