உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் கடைகள் ரூ.1.36 கோடிக்கு ஏலம்!

மாசாணியம்மன் கோவில் கடைகள் ரூ.1.36 கோடிக்கு ஏலம்!

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 17 கடைகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஏலம் நடந்தது. இதில் தற்காலிக 17 கடைகள் 69 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், பிரசாத கடை 28 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும், போட்டோ, பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் 25 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும், முடி சேகரிக்கும் கடை 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயின. சிதறு தேங்காய் இடம் 15,500 ரூபாய்க்கும், உயிர்ப்பொருள் சேகரம் செய்யும் இடம் 37,700 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 31 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட 63 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஏலம் போனது. உதவி ஆணையர் தனபால் முன்னிலையில் ஏலம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் மற்றும் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், செந்தமிழ்செல்வன் ஆகியோர் ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !