300 ஆண்டு பழமையான கோவில் கும்பாபிஷேகம்!
துடியலூர் : துடியலூரில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அரவான் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 3ம் தேதி நடக்கிறது. துடியலூர் சந்தைக்கடை மைதானத்தில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த அரவான் கோவிலில் கருவறை, விமானத் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள அரவான், விநாயகர், ஆஞ்சநேயர் சன்னதிகள் கும்பாபிஷேகம் 3ம் தேதி காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக, இன்று திருவிளக்கு வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருமுறை இசைத்தல் நடக்கிறது. நாளை திருமஞ்சனம், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், திருநீற்றுப் பிரசாதம் வழங்குதல், விமானக் கலசம் நிறுவுதல் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து, கும்பாபிஷேக விழா நடக்கிறது. நிகழ்ச்சியில், கவுமார மடலாய குமரகுருபர சுவாமி பங்கேற்கிறார். மதியம் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, துடியலூர் அரவான் கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.