வில்லேந்திய முருகன்
ADDED :3937 days ago
நாகப்பட்டினம் மாவட்டம், சாயாவனத்தில் உள்ளது. சாயாவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சாய்க்காடு எனப் புராணப் பெயர் கொண்டு விளங்கும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் வில்லேந்தியக் கோலத்தில் காணப்படுகிறார். நான்கு கரங்கள் கொண்ட இந்த பஞ்சலோக திருச்சிலை நீண்ட காலத்துக்கு முன்பு கடலில் இருந்து கிடைத்தன. எதிரிகள் பயம் உள்ளவர்கள் இம்முருகப் பெருமானை வழிபட, பயம் நீங்கி தைரியம் ஏற்படும்.