தெய்வமரம்
ADDED :3937 days ago
அரச மரம் வழிபாட்டுக்குரிய ஒன்று. மரங்களில் நான் அஸ்வத்தம் (அரச மரம்) என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறுகின்றார். அரச மரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக சொல்வார்கள். இம்மரத்தின் அடிப்பாகம் பிரம்மா, நடுப்பாகம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்றும், வேர் பாகத்தில் இந்திரனும், மத்திய பாகத்தில் அக்னி தேவரும், கிளைகளில் கோமாதாவும் உள்ளனர். அரச இலைகளில் முனிவர்களும், அடி வேர்களில் நான்கு வேதங்களும், அரச மரப் பாலில் அக்னி ஹோமமும், மரத்தைச் சுற்றிலும் புண்ய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவேதான், அரச மரத்தை தெய்வாம்சம் பொருந்திய மரமாக வணங்குகின்றோம்.