உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மிக உபன்யாசம்!

ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மிக உபன்யாசம்!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வருகின்ற, 50வது ஆண்டு ராமநவமி விழாவில், பரனுார் கிருஷ்ணபிரேமி  சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. திருக்கோவிலுார், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 50வது ஆண்டு ராமநவமி விழா, கடந்த  19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை 6:00  மணிக்கு, ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை, சீதா, லஷ்மண, அனுமந்த சமேத ராமச்சந்திரமூர்த்திக்குஅர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு 8:00  மணிக்கு, பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் ருக்மணி கல்யாண உபன்யாசம் நடந்தது.கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசும்போது, ’பகவானிடம்  நாம் சரணாகதி அடைந்தால், பகவான் நம்மை காப்பாற்றுவார். ஐம்புலன்களையும் அடக்கி, பகவானை அடைய வேண்டும். இத்தத்துவத்தை  உணர்த்தும் விதத்திலேயே, பெருமாளும், தாயாரும் சேர்ந்து நமக்கு அருள்பாலிக்கின்றனர்’ என்றார். உபன்யாசத்தில் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !