உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

பிரளயகாலேஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கி வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை  6:30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 7:00 மணிக்கு கொடி மரத்திற்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பழம் ஆகிய வற்றால் அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8:00 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமா னோர் தரிசனம் செய்தனர். தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 29ம் தேதி சமணரை கழுவி லேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், 1ம் தேதி தேர் திருவிழா, 2ம் தேதி தீர்த்தவாரி வீதி உற்சவம், 3ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !