கொளஞ்சியப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி!
ADDED :3855 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் செயல் அலுவலர் கொளஞ்சி, ஆய்வாளர் சுபத்ரா, ஆகியோர் முன்னிலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர், கோவில் பணியாளர்கள் என 75 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 10 லட்சத்து 881 ரூபாய் ரொக்கம், 56.500 கிராம் தங்கம், 438 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. கடந்த பிப்ரவரி 13ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணியபோது, 6 லட்சத்து 54 ஆயிரத்து 860 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.