உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மகா மாரியம்மன், ராக்காத்த பெருமாள் (ஐயனார்) கோவில்களில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி 20ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.   தொடர்ந்து 21ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.  தொடர்ந்து 22ம் தேதி காலை  இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கடம்  புறப்பாடாகி ஸ்ரீ வக்காரமாரியில் உள்ள ராக்காத்த பெருமாள் (ஐயனார்) ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர்  மகா அபிஷேகமும், இரவு  அம்மன் வீதியுலாவும் நடந்தது.  கும்பாபிஷேகத்தை ரவிசுந்தர் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !