உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் கொடியேற்றம்

திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் கொடியேற்றம்

திருத்தணி: திரவுபதியம்மன் கோவில் திருவிழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தனக்காப்பும், மாலை 6:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, மகாபாரதம், நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும் 27ம் தேதி முதல், மே மாதம், 10ம் தேதி வரை, இரவு 10:00 மணிக்கு, மகாபாரத நாடகம் நடைபெறும். 29ம் தேதி, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், மே 1ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லக்கு, 10ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது.

தேதி    நேரம்    உற்சவம்

ஏப். 26-    காலை 8:00 மணி    பாண்டவர் ஜனனம்
ஏப். 27-    மாலை 5:00 மணி-    பகாசூரன் சாதம்
ஏப். 28    மதியம் 2:00 மணி    பாஞ்சாலி அம்மன் தோற்றம்
ஏப். 29    நண்பகல் 11:30 மணி    திரவுபதியம்மன் திருமணம், இரவு 8:00 மணி-    உற்சவர் அம்மன் வீதியுலா
ஏப். 30    -காலை 7:00 மணி    சந்தனக்காப்பு

மே 1-    முற்பகல் 11:30 மணி    சுபத்திரை திருக்கல்யாணம், இரவு 9:00 மணி-    புஷ்ப பல்லக்கு
மே 2-    காலை 8:00 மணி    சந்தனக்காப்பு
மே 3    காலை 7:00 மணி-    சந்தனக்காப்பு
மே 4-    காலை 10:30 மணி    அர்ஜுனன் தபசு
மே 5    -காலை 7:00 மணி-    சந்தனக்காப்பு
மே 6    மாலை 6:00 மணி-    அர்ஜுனன் பசுக்கள் மீட்சி உற்சவம்
மே 7-    காலை 7:30 மணி-    ராஜகோபுரம் 7ம் ஆண்டு விழா மதியம் 12:00 மணி-    கிருஷ்ணன் துாது பவனி
மே 8    இரவு 11:00 மணி-    சக்தி அலகு நிறுத்துதல்
மே 9    -இரவு 7:00 மணி-    சிம்ம வாகன உலா
மே 10    காலை 9:00 மணி    -துரியோதனன் படுகளம், பகல் 11:30 மணி-    அக்னி வளர்த்தல்
மே 10    -மாலை 6:00 மணி    -தீமிதி திருவிழா, இரவு 9:00 மணி    அம்மன் வீதியுலா
மே 11    காலை 11:00 மணி-    தர்மர் பட்டாபிஷேகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !