பவளமலை முருகனுக்கு இன்று சண்முகார்ச்சனை
ADDED :3857 days ago
கோபி: கோபி, பவளமலை முத்துக்குமார ஸ்வாமி கோவிலில், வளர்பிறை சஷ்டி பூஜை இன்று காலை நடக்கிறது. இன்று காலை, 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு, ஆறு சிவாச்சாரியர்களை கொண்டு சண்முகார்ச்சனை நடக்கிறது. மதியம், 12 மணிக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.