முருகன் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா துவக்கம்!
ADDED :3787 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில், சித்திரை வசந்த திருவிழா, நேற்று துவங்கியது. வரும் மே 3ம் தேதி வரை, 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும், ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்திலும், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினமும், மாலை நேரத்தில், மண்டகப்படிதாரர் சார்பில், ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறும்; சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். இரவு, கிரி வீதிகள் வழியாக, ஜெயந்திநாதர், திருக்கோவில் வந்து சேர்வார்.