உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேரங்கோடு சிவன் கோவில் கும்பாபிஷேக விழா!

சேரங்கோடு சிவன் கோவில் கும்பாபிஷேக விழா!

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சேரங்கோடு சிவன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பிஷேக விழா கடந்த, 23ம்தேதி துவங்கியது. அன்று காலை, 6:30 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலமும், தொடர்ந்து யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.இரவு, 9:30 மணிக்கு சுவாமிகளுக்கும், கோபுரகலசம் வைத்தல், எந்திரஸ்தாபனம், சுவாமிகளுக்க அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை யாக சாலை பூஜைகளும், மகாதீபாராதனை மற்றும், 9:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.பூஜைகளை தியாகராஜகுருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள், விழாகமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !