சாகை வார்த்தல் உற்சவம்!
ADDED :4174 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், செவலைரோடு, கெங்கையம்மன் கோவிலில் நடந்த சாகை வார்த்தல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூர் செவலை ரோட்டில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 18ம் தேதி பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.
நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி, வீதியுலா நடந்தது. கரகம் கோவிலை அடைந்தவுடன் வேண்டுதல் உள்ள பக்தர்கள் சாகை (கூழ்) எடுத்துவந்து சுவாமிக்கு சமர்பித்தனர். இவை பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தொழில் அதிபர் டி.கே.டி.பாபு தலைமையில் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.