பதினாறு வகையான இலிங்கபூசா பலன்!
ADDED :3922 days ago
வாலுகமி ருத்திகைபல் லவம்கந்த மாவரிசி
வாச மலருத கங்குளம்
மருவுகோ மயநீறு நவநீதம் ஓதனம்
வளம்பெறு பவித்தி ரமுடிக்
கோலமுறு கூர்ச்சமொடு எழுத்துருத் திரமணிக்
குறிகளீ ரெண்வ டிவினும்
குளிர்பூசை செயமுறையின் முத்தியாத் துமசுத்தி
கூர்சவுக் கியமெய் யழகு
சாலவரும் இட்டகா மியம்இன்ப நற்குணம்
சாம்பிராச் சியம கிழ்வுடன்
சாற்றுநோ யின்மைபாக் கியமங்க திடமாயுள்
தருகாந்தி அறிவி கபரச்
சீலசுக வாழ்வருள்வை நின்கருணை வரலாறு
செப்பவென் வசம தாமோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.