ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வசந்த உற்சவ விழா!
ADDED :3918 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 7 நாள்கள் நடைபெறும் வசந்த உற்சவ திருவிழா நேற்று துவங்கியது. இவ்விழாவையொட்டி, சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு வசந்த மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடந்தது. பின்னர், சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் பல்லாக்கில் புறப்பாடாகி, சேது மாதவர் தீர்த்த குளத்தில் எழுந்தருளினர். அங்கு கோயில் குருக்கள் உதயகுமார் மகா தீபாராதனை நடத்தினார். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இவ்விழா மே 2 ல் முடியும் என, கோயில் குருக்கள் தெரிவித்தனர்.