சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்!
ADDED :3818 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில் சாமி வீதி உலா நடந்தது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 22ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அ பிஷேக அலங்காரம் செய்தனர். அன்று இரவு பூ பல்லக்கில் சாமி வீதி உலா நடந்தது. கடந்த 24ம் தேதி சாகை வார்த்தல் நடந்தது. ஐந்தாம் நாள் விழாவாக சாமி வீதி உலா நடந்தது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல், வரும் மே 1ம் தேதி நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை சி றுகடம்பூர் பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.