பழநி உண்டியல் ரூ.1.61 கோடி வசூல்!
ADDED :3871 days ago
பழநி : பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 664 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 330 கிராம், வெளிநாட்டு கரன்சி 178, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 61 லட்சத்து 84 ஆயிரத்து 65 கிடைத்துள்ளது. தங்க கட்டிகள், வெள்ளித் தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.