உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்ரமணியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்!

சிவசுப்ரமணியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்!

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், மே 3ல் நடைபெறும். சைதாப்பேட்டை, வாத்தியார் சுப்பராயன்  தெருவில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏப்., 24ல் துவங்கி, திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. தினமும்  காலை, மாலை, இரவில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைவு நாளான மே 3ல், காலை 9:00 மணிக்கு, பிரதான யாக சாலையில் மகாபூ ர்ணாஹூதி தீபாராதனை கலசம் புறப்படுதல் நடைபெறும். தொடர்ந்து, 9:30 மணி அளவில், அனைத்து விமானங்கள் ராஜகோபுரம் மகா கும்பாபி÷ ஷகம் நடைபெறும். இரவு 7:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம்; தொடர்ந்து, பஞ்சமூர்த்தி உற்சவமும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !