உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியபிரபை வாகனத்தில் கச்சபேஸ்வரர் பவனி!

சூரியபிரபை வாகனத்தில் கச்சபேஸ்வரர் பவனி!

காஞ்சிபுரம்: சித்திரை பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தார். காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாள் உற்சவத்தில், நேற்று காலை சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சந்திர பிரபை வாகனத்தில் வலம் வந்தார். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, கச்சபேஸ்வரர் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !