உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கோவிலில் நலத்தோட்டம் திறப்பு

அவிநாசி கோவிலில் நலத்தோட்டம் திறப்பு

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தென்பகுதியில், நம்பி ஆரூரர் நலத்தோட்டம் திறக்கப்பட்டது. அவிநாசி கோவில் செயல் அலுவலர் அழகேசன் தலைமை வகித்தார். பூங்கா மற்றும் நலத்தோட் டத்தை, அதை நிறுவிய, எஸ்.பெரியபாளையம், "ஜி.யு.எஸ்., கிளாத்திங் நிர்வாக இயக்குனர் உமாசங்கர், சாந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.உமாசங்கர் கூறுகையில், ""நம்பி ஆரூரர் நலத்தோட்டத்தில், 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள், ஒன்பது ராசிகளுக்குரிய மரங்கள், எட்டு திசைகளுக்குரிய மரங்கள் நடப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களுடன் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தோட்டம் முழுவதும், பயன் தரும் மூலிகை மரங்கள், பூச்செடிகள் வளர்க்கப்படும், என்றார்.திருப்பூர் சைவ சித்தாந்த சபை தலைவர் ஆறுமுகம், சுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள், ஆரூரன் வார வழிபாட்டுக்குழுவினர் பங்கேற்றனர். பூங்கா பராமரிப்பு மேலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !