அத்திபட்டி மாரியம்மன் கோயில் திருவிழா!
ADDED :3872 days ago
பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டியில் நடந்த மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏப்.24ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழா ஐந்து நாட்கள் நடந்தன. அத்திபட்டியை சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனை தரிசித்தனர். பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.