உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறவி மருந்தீஸர் கோவில் தேரோட்டம்!

பிறவி மருந்தீஸர் கோவில் தேரோட்டம்!

திருத்துறைப்பூண்டி; திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸர் கோவில் சித்திரை தேரோட்டம், நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீசர் கோவில் தேரோட்டம், நேற்று காலை, 6 மணிக்கு துவங்கியது. தியாகராஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் சிவகுமார்ராம், செயல் அலுவலர் பாஸ்கரன் உள்பட, ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு வீதிகள் வழியாக மாலை, 6 மணிக்கு நிலைக்கு வந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, டி.எஸ்.பி., கண்ணதாசன் தலைமையில் போலீஸார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !