சாத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம்
ADDED :3818 days ago
சாத்தூர்: சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப்பொங்கல்விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு கணபதிஹோமம் நடந்தது. இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கி, காப்பு கட்டுதல் நடந்தது. அம்மன் நகர் வலமும், வைப்பாற்றில் இருந்து கரகம் எடுத்து வரும் நிகழச்சியும் நடந்தது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வருவார். மே 5ல் பொங்கல்விழாவும், 7ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மகமை கமிட்டி, உறவின் முறைகமிட்டி தலைவர் சஞ்சீவிராஜன், செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் பாலமுருகன், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.