உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமண்டார்குடி கோவில் கும்பாபிஷேக துவக்க விழா!

சோமண்டார்குடி கோவில் கும்பாபிஷேக துவக்க விழா!

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி சோமனாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில்  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த லோகாம்பாள் சமேத சோமனாதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று  நாட்கள் நடைபெறும் கும்பாபிஷேக விழா நேற்று காலை 6:00 மணிக்கு  பூஜையுடன் துவங்கியது. விக்னேஷ்வர பூஜை, புன்னியாக வஜனம் ஆகிய வற்றிக்கு பின், கும்ப கலசங்கள் ஆவாகனம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், மகாலட்சுமி, சுதர்சனர், தன்வந்திரி, நவக்கிரகம் என 5 வகையான யாக ங்கள் நடந்தது.யாகசாலைக்கு உரிய பூஜைகள் செய்து மாலை 6:00 மணிக்கு முதல்கால யாக பூஜைகள் நடந்தது. கோபுர கலசங்களுடன் பெண்கள்,  முலைப்பாலிகையை சுமந்தவாறு ஊர்வலமாக சென்றனர். இதில்  13 கோபுரங்களுக்கும் கலசங்கள் ஸ்தாபிதம் செய்தனர். இன்று யாகசாலை பூ ஜைகள் நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !