உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.33 லட்சத்திற்கு ஏலம் போனது காணிக்கை முடி!

ரூ.33 லட்சத்திற்கு ஏலம் போனது காணிக்கை முடி!

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு 2011-2012ம் ஆண்டிற்கான டெண்டர் விடப்பட்டது. இதில் காணிக்கையாக வழங்கப்பட்ட முடி சேகரிக்க ரூ. 33 லட்சத்திற்கு ஏலம் போனது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயிலில் 2011-2012ம் ஆண்டிக்கான டெண்டர் விடப்பட்டது. இதில், முடி காணிக்கை 33 லட்சத்திற்கும், கோழிகள் 7 லட்சத்திற்கும், வெள்ளி வகைகள் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும், முட்டைகள், ஒரு லட்சத்து 35 ஆயிரத்திற்கும், உப்பு ஒரு லட்சத்திற்கும், வேப்பிலை ஒரு லட்சத்து 24 ஆயிரத்திற்கும், லட்டுகள் 40 ஆயிரத்திற்கும், நெய்விளக்கு 35 ஆயிரத்திற்கும் டெண்டர் விடப்பட்டது. இந்து அறநிலைய துறை இணை கமிஷனர் ராஜமாணிக்கம், சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, ஆய்வாளர் சிவாஜி, கண்காணிப்பாளர் மாரியப்பன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !