மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் ரத்து!
ADDED :5217 days ago
விழுப்புரம் : பலத்த மழை காரணமாக மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.