85 ஆண்டுகளுக்கு பின் ஆலங்குடியில் தேரோட்டம்!
ADDED :3870 days ago
திருவாரூர்: ஆலங்குடி கோவிலில், 85 ஆண்டுகளுக்கு பின், புதிய தேரில் குரு பகவான் தேரோட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் நவக்கிரகங்களில், குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்க, குரு பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில், 27 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 ஆண்டுகளுக்குப்பின், குருபகவான் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.