ராஜ செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3870 days ago
மசக்காளிபாளையம் ராஜ செல்வகணபதி கோவில் கும்பாபிஷேக விழா 1.5.2015 ல் நடந்தது.
டி.வி.எச்., ஏகாந்தா குடியிருப்பு பகுதியிலுள்ள ராஜ செல்வகணபதி கோவிலில், பால கணபதி, நர்த்தன கணபதி, முருகன், லிங்கோத்பவர், துர்கை அம்மன், சாய்பாபா ஆகிய சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று, கும்பாபிஷேக விழா நேற்று கோலாகளமாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு முதல்கால யாக பூஜையும், மாலை 8:00 மணிக்கு பக்திப்பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை யும், காலை 8:30 மணிக்கு கலச பூஜையும் நடந்தது. சிவாச்சாரியார்கள் விஸ்வநாதன், சிவக்குமார், பால குருமூர்த்தி ஆகியோர் கலச அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்தபதி சுரேஷ்குமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.