உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்ச லிங்கேஸ்வரர் வீதியுலா

ருத்ராட்ச லிங்கேஸ்வரர் வீதியுலா

புதுச்சேரி: புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் மார்கண்டேய மடத்தில், ருத்ராட்ச லிங்கேஸ்வர் பிரதிஷ்டை விழா நேற்று நடக்கிறது. அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை அருகே உள்ள மார்கண்டேய மடத்தில், இமயமலையில் இருந்து வரவழைத்த 1 லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தை கொண்டு, 8 அடி உயர மகா ருத்ராட்ச லிங்கேஸ்வரர் சிலை உருவாக்கி, தினமும் பூஜைகள் நடந்தது. மடத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று லிங்கேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதையொட்டி, காலை கணபதி ேஹாமம், சிறப்பு தீபாராதனை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:30 மணிக்கு ருத்ராட்ச லிங்கேஸ்வரர் வீதியுலா நடந்தது. வீதியுலாவை உளுந்துார்பேட்டை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம், சாரம், நேரு வீதி, புஸ்சி வீதி, நெல்லித் தோப்பு, ரெட்டியார்பாளையம் வழியாக சென்ற வீதியுலா மீண்டும் மடத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகி சந்திரசேகரன் உட்பட பலர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !