உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாதிருபுரசுந்தரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சண்டி ேஹாமம்!

பாலாதிருபுரசுந்தரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சண்டி ேஹாமம்!

புதுச்சேரி: புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் டோல்கேட் அருகே பாலா திருபுரசுந்தரி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, இரண்டாம் ஆண்டு நவ சண்டி ேஹாமம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. மாலை 5.30 மணி மண்டப பூஜை, சண்டிகா நவாவரண பூஜை, யோகினி பூஜை, பைரவ பூஜை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சண்டிகா நவாவரண பூஜை, சண்டி ேஹாமம், சவுபாக்கிய திரவிய சமர்ப்பணம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடந்தது. பாலாதிருபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பவுர்ணமி பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !