உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலிநரசிங்க பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

கதலிநரசிங்க பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழாவில் திருத்தேரில் பவனி வந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்ரல் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். பத்தாம் நாள் நிகழ்ச்சியில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது. நேற்று நடந்த விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலி நரசிங்கப்பெருமாள், தேர் எல்லையில் இருந்து திருத்தேரில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார். மெயின் ரோடு வழியாக சென்று ஊர் எல்லையில் திருத்தேர் நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மாலை மீண்டும் திருத்தேரில் பவனி வரும் சுவாமி கோயில் சென்றடைவார். ஜம்புலிபுத்தூரைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து "கோவிந்தா கோஷத்துடன், தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !