உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயிலில் சந்தன அபிஷேகம்

பரமக்குடி பெருமாள் கோயிலில் சந்தன அபிஷேகம்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று பெருமாள், கருப்பணசாமிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 29 ல், பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி பெருமாள், கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. பின்னர் பக்தர்கள் இளநீர் காவடி, சந்தனகுடம் ஏந்தி வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு மேலத்தெரு சவுராஷ்ட்ர மகாஜனங்கள் சார்பில் கருப்பணசாமிக்கு 100 வது ஆண்டு சந்தனகுடம் அபிஷேகம் நடந்தது. காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !