உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக குளத்தில் பவுர்ணமி தீர்த்தவாரி

மகாமக குளத்தில் பவுர்ணமி தீர்த்தவாரி

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி கோவில் மகாமக குளத்தில், சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, குளக்கரையில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாள் மற்றும் சோமஸ்கந்தருடன் எழுந்தருளினார். அஸ்திரதேவர் மகாமக குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார். இதையடுத்து, தீபாரதனை நடைபெற்றது. மகாமக குளத்திலிருந்து, கோவிலுக்கு ஸ்வாமி வீதி உலா நடந்தது. சித்திரை மாத பவுர்ணமி தினமான நேற்று மாலை, தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் திருவடி குடில் சுவாமிகள் தொடக்கி வைத்தார். தேவாரம், திருமுறை பாராயணம் பாடி பக்தர்கள் மகாமக குளத்தை, மூன்று முறை வலம் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தெய்வ சேக்கிழார் மன்றம் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !