உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,பெரியாழ்வார் கோயில் ஆனிவிழா கொடியேற்றம்

ஸ்ரீவி.,பெரியாழ்வார் கோயில் ஆனிவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., பெரியாழ்வார் கோயில் ஆனி விழா கொடியேற்றுடன் துவங்கியது. ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட பெரியாழ்வார் கோயில் ஆனி விழா நேற்று கொடியேற்றுடன் துவங்கியது. அன்னப்பறவை முத்திரை பதித்த கொடி, மாடவீதிகளில் சுற்றி வரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கோவிந்தாச்சாரி பட்டர் கொடியேற்றினார். துணை ஆணையாளர் கஜேந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான் பட்டர் சுதர்சனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !