உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலை கோயிலில் அமாவாசை: அடிப்படை வசதியின்றி பத்தர்கள் தவிப்பு

சதுரகிரி மலை கோயிலில் அமாவாசை: அடிப்படை வசதியின்றி பத்தர்கள் தவிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று நடந்த ஆனி அமாவாசை யொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் ,அடிப்படை வசதியின்றி தவித்தனர். தென் கைலாய மலை என அழைக்கப்படும் சுந்தர மாகாலிங்கம் சுவாமி கோயில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். இதற்காக பக்தர்கள் தாணிப்பாறை பகுதியில் இருந்து 7 கி.மீ., தூரம் கரடு, முரடான மலை பாதையில் எறி செல்கின்றனர். குறைந்த பட்சம் மலையில் மூன்று மணி நேரம் நடந்து சென்றால்தான் கோயிலை சென்றடையமுடியும் .இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் கூட ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை. இந்த பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் எந்த வசதிகளும் செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையோ உண்டியல் வருமானத்தில் மட்டுமே கண் வைக்கிறது தவிர ,பக்தர்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை. பக்தர்கள் மலை ஏறும் போது ஏதாவது ஆபத்து என்றால் கூட முதலுதவி சிகிச்சை மையம் கூட இல்லாதது , பக்தர்களை வேதனையடை செய்கிறது. இங்கு பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. கோயில் செல்லும் பக்தர்களுக்கு பரம்பரை அறங்காவலர்களால் அன்னதானம் வழங்கப்படும் நிலையில், குடி நீர் , மொட்டை போடும் நபர்கள் குளிக்க போதுமான வசதி கூட இந்து அறநிலையத்துறையால் செய்யப்படவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண, மலைப்பகுதியில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீர் வசதி செய்ய வேண்டும். கோயில் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் நிலையில், இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு போதுமான வசதிகளை செய்யஅரசும் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !