உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகன்குளத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்

அழகன்குளத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்

பனைக்குளம்: அழகன்குளம் ஆண்டாள் சமேத சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். "கோவிந்தா கோஷம் முழங்க, நேற்று காலை 9 மணிக்கு குதிரை வாகனத்தில் கடலும் வைகையாறும் சங்கமிக்கும் இடத்தில் கள்ளழகர் வேடமிட்டு வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். பட்டாச்சாரியார்கள் திருவேங்கடம் தலைமையில் முத்துக்கிருஷ்ணன் அய்யங்கார், கோவிந்தன் அய்யங்கார், ஸ்ரீனிவாச ராகவன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இரவு 7 மணியளவில் கருட வாகனத்தில் ஆண்டாள் சமதேராக வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !