திருமலை திருப்பதியில் கருட சேவை கோலாகலம்!
ADDED :3866 days ago
திருப்பதி: திருமலையில் நடைபெற்ற வைகாசி மாத கருட சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மாடவீதிகளில் சர்வ அலங்காரத்துடன் கருட வாகனத்தின் மீதமர்ந்தபடி வந்த பெருமாளை கண்டு பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் மலையை அதிரவைத்தது. விழாவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.